fbpx

ரஷ்யா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர்!. அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம்!

Zelensky: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து விமர்சித்த அமெரிக்கா மீது உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. அதிபர் ஜெலன்ஸ்கி சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங், விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது. எத்தகைய வலிமையான நாடு, எத்தகைய வலிமையான மக்கள். ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷ்யா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.

Readmore:நாட்டின் முதல் செங்குத்து தூக்குப்பாலம்!. பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!. அதன் சிறப்புகள் தெரியுமா?

English Summary

They are afraid to even pronounce the name Russia! Ukrainian President Zelensky condemns America!

Kokila

Next Post

சோலார் அடுப்பு வாங்க பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000 முதல் 20000 ரூபாய் வரை மானியம்...!

Sun Apr 6 , 2025
Central government to provide subsidy of Rs. 15,000 to Rs. 20,000 to women to buy solar cookers

You May Like