உத்தரப் பிரதேசத்தில் ராமநவமி கொண்டாட்டத்தில் இந்துத்துவா அமைப்பினர் மசூதி மேல் காவி கொடுகளை பறக்கவிட்டு கோஷம் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஜா சுஹேல்தேவ் சம்மன் சுரக்ஷா மஞ்ச் என்ற இந்து அமைப்பினர், சிக்கந்த்ரா பகுதியில் உள்ள மசூதிக்கு 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் தர்கா வாயிலுக்கு முன்னால் காவி கொடிகளை அசைத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இந்து அமைப்பை சேர்ந்த சிலர் மசூதியின் மேல் பகுதிக்கு சென்று காவி கொடியை பறக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்காவிலிருந்து அந்த நபர்களை அப்புறப்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக கங்கா நகர் துணை காவல் ஆணையர் குல்தீப் சிங் குணவத் தெரிவித்தார்.
அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய தொடர் நிகழ்வுகள் பதற்றத்தைத் தூண்டி, பாதுகாப்பு மற்றும் அரசியல் கவனத்தை அதிகரித்துள்ளன.
Read more: இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் 88% பேரின் சொத்து விவரம் ரகசியம்..