அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகாரளிக்க உள்ளோம். தேவைப்பட்டால், நீதிமன்றங்களையும் நடுவோம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது. குற்றங்கள் அதிகரிப்பதற்கு பொன்முடியின் செயல் ஒரு உதாரணம். எரிமலை என்றாவது ஒருநாள் வெடிக்கும். திமுக அரசாங்கம், ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதையும் புண்படுத்தியிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின், மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்படி பெரிய பிரச்சனையாக வெடித்ததோ, அதேபோல், தமிழ்நாட்டிலும் வெடிக்கும். திராவிட கழகத்தினர் தாலியை அறுக்கின்ற விஷயங்களுக்கு தான் கூட்டங்களை நடத்துவார்கள். அமைச்சர் பொன்முடியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். செய்வதை எல்லாம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் மட்டும் செய்த தவறு நியாயமாகிவிடுமா..? அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகாரளிக்க உள்ளோம். தேவைப்பட்டால், நீதிமன்றங்களையும் நடுவோம்”.
Read More : ’நீண்ட நேரம் இதை செய்தால் நிச்சயம் புற்றுநோய் வரும்’..!! வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை..!! உஷாரா இருங்க..!!