மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்பி, எம்எல்ஏ-க்களே எல்லோருக்கும் எஜமானர்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழக நிகழ்வில் உரையாற்றிய அவர், “ஒரு அரசியலமைப்புச் சட்ட அதிகாரி பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நாட்டின் உயர்ந்த நலனால் வழிநடத்தப்படுகிறது. அரசியலமைப்பில் பாராளுமன்றத்திற்கு மேல் வேறு எந்த அதிகாரமும் இல்லை. நாடாளுமன்றம் தான் உயர்ந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்பதை இறுதி எஜமானர்களாகக் கருதுவார்கள். அதற்கு மேல் எந்த அதிகாரமும் கிடையாது” என்று பேசியுள்ளார்.
முன்னதாக, மசோதாக்கள் மீது ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் காலக்கெடு நிர்ணயித்ததை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுவதாக விமர்சித்திருந்தார்.
Read More : சற்றுமுன்..!! டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு..!! இதோ ரேங்க் லிஸ்ட்..!! எப்படி பார்ப்பது..?