fbpx

தமிழகத்தில் மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!! – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 28 முதல் மே 4 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதன் காரணமாக ஏப். 28 முதல் மே 4 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் மே 2-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஓருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில், வானில் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more: கடன் சிக்கல் மோசமாகும்.. நிலையான வேலை இருக்காது.. ஆபத்தில் இந்திய மிடில் கிளாஸ் மக்கள்..!! – எச்சரிக்கை விடுத்த வல்லுநர்

English Summary

Moderate rains likely in Tamil Nadu till May 4..!! – Meteorological Department information

Next Post

வேலைக்காரி போல இருக்கும் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அஜித்.. அதுமட்டுமில்ல.. முன்னாள் காதலி ஹீரா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்..

Mon Apr 28 , 2025
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அஜித்தின் முன்னாள் காதலியும் முன்னாள் நடிகையுமான ஹீரா ராஜகோபால், தனது பிரேக் அப் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில், அஜித் தனக்கு துரோகம் செய்ததாகவும், ரசிகர்களை வைத்து மிரட்டியதாகவும், தனது பெயரை […]

You May Like