ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

tamilnadu cm mk stalin

கோவை கொடிசியாவில் 2 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான முதலாவது ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐ முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.. ஜவுளித்துறையின் வலுவான கட்டமைப்பை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஜவுளித்துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் மாநில அரசின் துணி நூல் துறை மற்றும் இந்திய கூட்டமைப்பு சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.


இந்த மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ ஜவுளி துறையை மேம்படுத்த திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.. ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும்.. இதற்காக ஆண்டுக்கு ரூ. 30 கோடி ஒதுக்கப்படும். இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில்முனைவோருக்கு ஒரு கோரிக்கையையும் வைக்க விரும்புகிறேன்..

மிகச்சிறந்த உட்கட்டமைப்பை கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து, நீங்களும் வளர்ந்து தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.. 1 ட்ரில்லியன் டாலின் பொருளாதாரம்  என்ற திராவிட மாடலின் பெருங்கனவில் ஜவுளித்துறை கணிசமாக பங்கு வகிக்க வேண்டும்.. இந்த மாநாட்டின் வெற்றி அதற்கு உதவும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்..

Read More : ஆதார் மையத்தில் அரசு வேலை..!! 282 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் இருக்கு..!!

RUPA

Next Post

தமிழகத்தில் மட்டும் இந்த இழிநிலை .. குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்..? ஸ்டாலின் அரசை சாடிய அண்ணாமலை..!

Thu Jan 29 , 2026
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.. மறுபுறம் ஆளுங்கட்சியான திமுக மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.. இந்த நிலையில் சென்னை அரசுக் கல்லூரியில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
Annamalai Vs Stalin Updatenews360 1

You May Like