அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கை.. முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடப் போகும் ஜாக்பாட் அறிவிப்பு..!

Mk Stalin Tn Govt 2025

தமிழ்நாடு அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களில் 1.4.2003 தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.. அதன்பிறகு பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது..


இதனிடையே ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. எனினும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் கடந்த காலங்களில் நடத்தினர்..

இந்த சூழலில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய ஓய்வூதிய திட்டங்களின் சாத்தியக் கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ககந்தீப் சிங் பேடி தலைமையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குழு அமைக்கப்பட்டது.. இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது..

இதையடுத்து பல்வேறு சங்கங்களுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்திய இந்த குழு, கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது..

இந்த சூழலில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இவர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.. எனவே ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன..

இந்த நிலையில் ஓய்வூதிய திட்டம் தொடர்பான இறுதி அறிக்கையை  சென்னை தலைமை செயலகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் தலைமையிலான குழு கடந்த 30 ம் தேதி சமர்ப்பித்தது..

இந்த நிலையில் பழைய ஓய்வூதியம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ மற்றும் போட்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போட்டோ ஜியோ அமைப்பினர் “ பழைய ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை நல்ல அறிவிப்பை வெளியிடுவார்.. 23 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் நாளை எங்கள் கோரிக்கை அமல்படுத்தப்படும்.. எங்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..

Read More : விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA..! அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

RUPA

Next Post

8வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.51,000 ஆக உயர்வு..? விரைவில் குட்நியூஸ்..!

Sat Jan 3 , 2026
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் படிகள் மற்றும் சம்பளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்… […]
1732771 8thpaycommissionupdate2 1

You May Like