இந்த உலகில் வினோத நிகழ்வுகள் ஆங்கங்கே நடப்பது அரிது, அப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் மருத்துவ துறையையும் விட்டுவைப்பதில்லை, ஒரு குழந்தைக்கு இரண்டு தலைகள், கொம்புகள் வைத்திருக்கும் குழந்தை, வாலுடன் பிறந்த குழந்தை போன்ற வினோத நிகழ்வும் நடந்திருக்கிறது, இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகத்துக்கே அறிய முடியவில்லை. அப்படி ஒரு வினோத நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.
மெக்சிகோவின் நியூவோ லியான் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 10 மாதங்கள் சரியான முறையில் மருத்துவர்கள் கண்காணிப்புடன், ஆரோக்கியமாக இந்த குழந்தை பிறந்துள்ளது. அதற்கு பிறகு தான் முதுகுக்கு கீழே 2 அங்குல நீளத்துடன் “வால்” இருந்திருக்கிறது, அந்த வாலை கவனித்த மருத்துவர்கள், அதன் மேல் ஊசியை குத்தி பார்த்தபோது குழந்தை வலியால் அழுததாக தெரிவித்தனர். அந்த வாலுக்கு தன்னிச்சையாக அசைவில்லா போதிலும் உணர்ச்சிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரன்டு மாதங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர்கள் ஆலோசித்தனர்.

வாலுடன் குழந்தை பிறப்பது புதிதல்ல, ஆனால் மெக்சிகோவில் இது முதல் முறை. பொதுவாக கருப்பையில் உருவாகும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் வால் போன்ற அமைப்பு இருக்கும். பின்னர், அப்பகுதி உடலுக்குள் தானாக சென்றுவிடும். ஆனால், சில குழந்தைகளுக்கு அது உள்ளே செல்லாமல் வால் போன்று அந்த அமைப்பு இருந்து விடுகிறதுஎன்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து குழந்தைக்கு இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து எந்த சிக்கல்களும் ஏற்படாமல் வாலை அகற்றினர். குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறினார். மேலும் அந்த வால் “தசை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை” கொண்ட ஒரு உண்மையான வால் என்று ஆய்வில் தெரிய வந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.