ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களையும், வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த மே 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் அண்ணா. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு அண்ணா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்டில், இசக்கிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு இசக்கிக்கு பெண் குழந்தை பிறந்ததாக மருத்துவர் கூறுகிறார். அதை கேட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அனைவரும் மருத்துவமனையில் இருக்க, சண்முகம் மட்டும் வரவில்லை. என் அண்ணன் வராமல் குழந்தைக்கு நான் பால் கொடுக்க மாட்டேன் என இசக்கி அடம் பிடிக்க, உடனே பரணி, சண்முகத்திற்கு கால் செய்கிறார். ஆனால் சண்முகம் நான் என்னால் வர முடியாது என கூறிவிட்டு காலை கட் செய்து விட்டான்.
உடனே பரணி வீடியோகால் செய்து இசக்கி மற்றும் குழந்தையை காட்டுகிறார். நம் அம்மா சூடாமணி தான் பிறந்திருக்கிறான் என இசக்கி கூறவும் கண்ணீர்விட்ட சண்முகம் உடனடியாக புறப்பட்டு மருத்துவமனைக்கு செல்கிறான். அங்கு, தனது மருமகளை தூக்கி கொஞ்சி கண்ணீர்விட்டு அழுகிறார்.
Read more: Walking: எட்டு போட்டால்.. நோய் எட்டிப் போகும்.. 8 வடிவ நடைப்பயிற்சி தரும் நம்பமுடியாத பலன்கள்..!!