இந்த உலகம் சில அதிசயங்களால் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். கண்ணால் நம்ப முடியாத இயற்கையின் விசித்திரங்கள் மனிதனை மீண்டும் மீண்டும் ஆராயச்செய்கின்றன. இந்தியாவிலும் அப்படி பல இடங்கள் உள்ளன, உதாரணமாக மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக இருக்கிறது.
ஆனால் மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை அது பாலைவனமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். அதுதான் இல்லை. ஏமன் நாட்டின் ஹராஜ் பகுதியில் உள்ள அல்-ஹூதாகிப் என்ற கிராமத்தில் இதுவரை ஒரு முறை கூட மழை பெய்தது கிடையாது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கிராமம், மேகங்களை விட உயரத்தில் இருக்கின்றது.
இதனால், மேகங்கள் கிராமத்துக்குக் கீழே இருப்பதால் மழை நேரடியாக பொழிவதில்லை. இதனால் உலகில் மழைப்பொழிவே இல்லாத பகுதியாக அல்-ஹூதாகிப் கிராமம் அறியப்படுகிறது. குளிர் காலத்தில் அதிகாலையில் பயங்கர குளிர் இருந்தாலும் சூரிய உதயமான பின்னர் கோடை காலம் போன்று காணப்படுகிறது. மேகத்தை விட உயரமான இடத்தில் இருப்பதால் இந்த இடம் வெப்பம் மிகுந்த இடமாகவும் காணப்படுகிறது.
இந்தக் கிராமத்தில் இரண்டு பள்ளிகள், ஹதிமி மசூதி மற்றும் மன்சூர் அல் யேமன் மசூதி என இரண்டு மசூதிகள் உள்ளன. அரபியில் கஹ்ஃப் உன்-நயீம் என்று அறியப்படும் `ஆசீர்வாத குகை’ ஹுடாய்ப் கோட்டைக்குக் கீழே அமைந்துள்ளது. மலையின் உச்சியில் பல அழகான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. மலை உச்சியில் நின்று பார்க்கும் காட்சியைக் காணவே இங்கு பல சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த பகுதியில் பழங்கால கட்டிடங்களையும் அதே நேரத்தில் மார்டன் கட்டிடங்களையும் காண முடியும். இந்த கிராமத்தில் அல்போரா இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மழைப்பொழிவே இல்லாத பகுதியாக அறியப்பட்ட இந்த கிராமத்தை பார்ப்பதற்காகவே தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
Read more: நெஞ்சே பதறுதே.. 3 பெண் பிள்ளைகளை அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை..!! நாமக்கல்லில் பரபரப்பு..