தருமபுரியில் பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை சித்திரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தருமபுரி சாலை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மனைவி எழிலரசி (23). இந்தத் தம்பதியினருக்கு 3 வயதில் சிவதர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (28) என்பவருடன் எழிலரசிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
தனது கணவர் சிவசங்கரின் எச்சரிக்கையையும் மீறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழிலரசி தனது 3 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி, தருமபுரியில் ஐயப்பனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களது தனிமைக்கு அந்தக் குழந்தை இடையூறாக இருப்பதாக கருதிய ஐயப்பன், குழந்தையைத் தந்தையிடமே அனுப்பிவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், எழிலரசி அதற்குச் சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த ஐயப்பன் தினமும் போதை தலைக்கேறிய நிலையில் பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துச் சித்திரவதை செய்துள்ளார். இந்த கொடுமைகள் தாய் எழிலரசிக்கு தெரிந்தே நடந்துள்ளதுதான் உச்சக்கட்ட அவலம்.
தொடர் சித்திரவதையால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியை, கடந்த 13-ம் தேதி நள்ளிரவு எழிலரசி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தையின் உடலில் இருந்த கொடூரமான காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தருமபுரி நகரப் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், கள்ளக்காதலன் ஐயப்பன் குழந்தைக்குச் சிகரெட் சூடு வைத்ததும், அதற்குத் தாய் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எழிலரசி மற்றும் ஐயப்பன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read More : தமிழ்நாட்டில் நாளை முதல் லாரிகள் ஓடாது..!! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்..!!



