அமெரிக்கா மீது நேரடி தாக்குதல்!. கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய டிரம்ப்!. இதுதான் காரணம்!.

2f2ac4021f8796d8d097c5724f3e2542

அமெரிக்கா மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்ததை தொடர்ந்து, வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் , பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது. இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம். அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாளுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.

Readmore: வயிற்றுப் புற்றுநோயின் 5 எச்சரிக்கை அறிகுறிகள்.. கட்டாயம் புறக்கணிக்கக் கூடாது..

KOKILA

Next Post

பொது இடங்களில் மது... காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்...! அண்ணாமலை கோரிக்கை

Sat Jun 28 , 2025
பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி […]
Annamalai 2025 1

You May Like