தமிழக பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்..!! நடைமுறைக்கு வந்த கடுமையான விதிமுறைகள்..!! என்ன தெரியுமா..?

Tn Government registration 2025

தமிழ்நாட்டில் நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சொத்து பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாகவும் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கிடைத்துள்ள இந்த ஒப்புதலின் மூலம், தமிழகப் பதிவுத்துறையில் இனி மிகக் கடுமையான மற்றும் புதிய நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன.


இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, இனி எந்தவொரு சொத்தைப் பதிவு செய்ய முற்படும்போதும் அந்தச் சொத்து தொடர்பான ‘அசல் உரிமை ஆவணங்களை’ (Original Documents) கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை நகல் ஆவணங்களை வைத்துச் செய்யப்பட்டு வந்த பதிவுகளுக்கு இனி இடமில்லை. போலி ஆவணங்களை தயாரித்து நிலங்களை அபகரிப்பது மற்றும் உரிமையாளர் அல்லாதவர்கள் சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளைத் தடுப்பதில் இந்த விதிமுறை ஒரு முக்கியக் கேடயமாக செயல்படும் என அரசு தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாதையர் வழி வந்த சொத்துக்கள் அல்லது பரம்பரைச் சொத்துக்களுக்குப் பல நேரங்களில் மூலப்பத்திரங்கள் (Parent Documents) இருப்பதில்லை. இத்தகைய சூழல்களைக் கையாளுவதற்கும் இந்தச் சட்டத்தில் தெளிவான வழிமுறை சொல்லப்பட்டுள்ளது. மூலப்பத்திரம் இல்லாத பட்சத்தில், அந்தச் சொத்திற்கான வருவாய்த்துறை வழங்கிய பட்டாவை அசல் ஆவணமாகச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கிய மாற்றமாக, அடமானத்தில் உள்ள சொத்துக்களை விற்கும் போது ஏற்படும் சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரு சொத்து வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அடமானத்தில் இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து ‘தடையில்லாச் சான்றிதழ்’ (NOC) பெற்றால் மட்டுமே இனி பத்திரப்பதிவு அனுமதிக்கப்படும். இதன் மூலம் அடமான விவரங்களை மறைத்துச் செய்யப்படும் இரட்டைப் பதிவுகள் மற்றும் மோசடி விற்பனைகள் இனி சாத்தியமில்லை.

Read More : போதையில் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நண்பன்..!! தென்னந்தோப்புக்குள் நடந்த பயங்கரம்..!! சிறுவர்களும் விட்டு வைக்கல..!! கதறும் குமரி..!!

CHELLA

Next Post

உங்கள் வாழ்வில் இந்த மாற்றங்களை செய்தால் நிச்சயம் புற்றுநோயை தடுக்க முடியும்..!! மருத்துவர் கூறும் கோல்டன் ரூல்ஸ்..!!

Sun Feb 1 , 2026
புற்றுநோய் என்பது முதுமையில் மட்டுமே வரக்கூடிய நோய் என்ற பிம்பம் தற்போதைய சூழலில் முற்றிலும் உடைந்துவிட்டது. சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் இந்த பாதிப்புக்கு உள்ளாவது மருத்துவ உலகையே கவலை கொள்ள செய்துள்ளது. “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கேற்ப, இளம் வயதிலேயே தகுந்த பரிசோதனைகளைச் செய்துகொள்வது கட்டாயமாகியுள்ளது. இருப்பினும், நமது அன்றாட வாழ்வியலில் சில ஆரோக்கியமான மாற்றங்களை செய்துகொள்வதன் மூலம், சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை புற்றுநோய் […]
Lung Cancer 2025

You May Like