கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் விற்பனையானது.
இந்த சூழலில் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160க்கு விற்பனை செய்யப்பட்டது.. அதே போல் வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.4000 குறைந்து ரூ.2.56 லட்சத்திற்கு விற்பனையானது.. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800க்கு விற்பனையாகிறது..
அதே போல் இன்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.257க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து 1 கிலோ ரூ.2.57 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம், வெள்ளி விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read More : Read More : பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!



