திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை அபிதா. இவர், தனது தவறான முடிவால், பட வாய்ப்புகளை இழந்ததை பற்றியும், தனக்குள் இருக்கும் சொல்ல முடியாத வலி பற்றியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
நடிகை அபிதாவின் உண்மையான பெயர் ஜெனிலா. இவர், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ஜெனிலாவின் பெயர் அபிதா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது பெயரை அபிதா என்றே மாற்றிக் கொண்டார்.
மேலும் இவர் உணர்ச்சிகள், அரசாட்சி, நம்நாடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதேபோல் சன் டி.வி யில் 2007 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் நடித்தார். அதில், அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், அபிதா தனது சினிமா பயணம் குறித்து சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ஒரு பத்திரிகை நிறுவனம், அபிதாவின் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், அபிதா பணம் தர மறுத்ததால், “சேது அபிதா ஆடை அவிழ்க்க தயார்” என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டினர்.
இது எனக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது. இதனால், தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஆனால், இந்த மன அழுத்தத்தில் இருந்து மீள, என்னுடைய தாயார் மற்றும் சகோதரி உறுதுணையாக இருந்தனர். இந்த சவாலான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்து, தற்போது இயல்பு வாழ்க்கையில், நம்பிக்கையுடன் பயணித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
Read More : “ஆசையாக பேசி ஆசை தீர உல்லாசமாக இருந்த காதலன்”..!! இளம்பெண் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!