சிறுமியை வன்கொடுமை செய்து இன்ஸ்டாகிராமில் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்ட பிரபல பாடகர்! பகீர் சம்பவம்!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகர் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் பிரபலமானவராக திகழ்கிறார். யூடியூபில் 27 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். 


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாடகர் அபிஷேக்கை கைது செய்தனர். 

விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் வசித்து வந்த அபிஷேக் , அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் நட்பாக பழகி, அவரை நம்பவைத்து ஓட்டலுக்கு அழைத்து சென்று, வன்கொடுமை செய்து, சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை தனது செல்போனில் படம்பிடித்து வைத்துள்ளார். இதனையடுத்து அபிஷேக்கிடமிருந்து அந்த சிறுமி விலகியுள்ளார். எனினும் பயத்தில் தனக்கு நடந்த சம்பவம் பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் பாடகர் அபிஷேக் வெளியிட்டத்தை பார்த்த சிறுமியின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, பாடகர் அபிஷேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

நூலிலையில் உயிர் தப்பிய அமைச்சர்! எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்த படகு!!

Fri Jun 9 , 2023
தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.  தெலங்கான மாநிலம் கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு […]
WhatsApp Image 2023 06 09 at 2.33.46 PM

You May Like