சில ஆண்டுகளுக்கு முன்பே தானும், மாதம்பட்டி ரங்கராஜனும், கணவன் மனைவியாக வாழ தொடங்கியதாக ஜோய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளார். யூ டியூப், இன்ஸ்டா, ட்விட்டர் என எங்கு சென்றாலும் மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த விவாத தான் நடந்து வருகிறது.. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜோய்கிரிசில்டா, ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக போட்ட பதிவு தான் இதற்கு காரணம்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜோய் கிரிசில்டா கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாரா? 2வது திருமணம் செல்லுபடியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் திருமணம் மிரட்டப்பட்டு நடந்ததாகவும், அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் மீண்டும் ஜோய்கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு
பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், “சில பயணங்கள் அமைதியாகத் தொடங்கினாலும், நம்பிக்கையுடன் வளர்கின்றன. நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு (திரு & திருமதி ரங்கராஜ்) அன்பு, கண்ணியம், முழு மனதுடனும், மரியாதையுடனும்
கணவன் மனைவியாக எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்த ஆண்டு, ஆழ்ந்த நன்றியுடனும், அமைதி மற்றும் அன்புடன் எங்கள் குட்டி குழந்தையை
வரவேற்க நாங்கள் தயாராகி வருகிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்..
மேலும் திருமண அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே ஜோய்கிரிசில்டா ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் தாலி அணிந்திருந்ததுடன், நெற்றியில் குங்குமமும் இருந்தது. அதே தாலியைத் தான் தனது மாதம்பட்டி ரங்கராஜனுடன் நடந்த திருமண அறிவிப்பை வெளியிடும் போதும் அணிந்திருந்தார். எனவே இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்து விட்டதா என்ற கேள்விகளும் எழ தொடங்கி உள்ளன..
எனினும் மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து இன்னும் எந்த கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.. இந்த திருமணம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஜோய்கிரிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதி இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார்..
இப்படி ரங்கராஜும், ஸ்ருதியும் மௌனம் காத்து வரும் நிலையில், ஜோய்கிரிசில்டா மட்டும் புகைப்படங்களையும், மகிழ்ச்சிப் பதிவுகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது..
Read More : அடுத்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடிக்கும் தல அஜித்.. ஆனா அங்க தான் இருக்கு புது ட்விஸ்ட்..!!