புது பைக்கை ஓட்டி பாக்க கேட்டும் கொடுக்காத நண்பன்..! காண்டான நண்பன் இரவு 1 மணிக்கு செய்த செயல்!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அடிபள்ளத்தெருவை சார்ந்தவர் உவைஸ் அகமது(19). இவர் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றார். மேலும் கேடிஎம் 390 என்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளதாக தெரிகிறது.


3 லட்சம் மதிப்புள்ள இந்த இருசக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபர் கிராமத்தில் பந்தாவுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை சென்ற வியாழக்கிழமை அன்று உவைஸின் நண்பரான பக்ருதீன் பார்த்துவிட்டு அந்த இருசக்கர வாகனத்தை தான் ஓட்டி பார்த்துவிட்டு தருவதாக கேட்டுள்ளார்.

ஆனால் தன்னுடைய நண்பரான பக்ருதீன் இதற்கு முன்னரே இருசக்கர வாகன திருட்டு, ஆடு, மாடு திருட்டு மற்றும் மது போதையில் தகராறு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதன் காரணமாக, அவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக இருசக்கர வாகனத்தை அவர் ஓட்டி பார்ப்பதற்கு வழங்க மறுத்துவிட்டார் உவைஸ்.

தன்னுடைய நண்பன் இருசக்கர வாகனத்தை வழங்க மறுத்துவிட்ட கோபத்திலிருந்த பக்ருதீன் அன்று இரவே தன்னுடைய இன்னொரு நண்பருடன் மது அறிந்திக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அளவுக்கதிகமாக மதுவை குடித்ததால் பக்ருதீனுக்கு போதை தலைக்கு ஏறியது.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் தன்னுடைய நண்பனான உவைஸ் அகமதுவின் வீடு இருக்கும் பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அந்தப் பகுதியில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், அந்த தெருவிற்கு அமைதியாக சென்ற பக்ருதீன் பெட்ரோலை இருசக்கர வாகனத்தின் மீது ஊற்றி தீ வைத்தார். அத்துடன் அந்த இருசக்கர வாகனத்திற்கு அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உவைஸ் அகமது நண்பரின் பல்சர் பைக்கையும் எரித்துவிட்டுத் தப்பி சென்று விட்டார்.

இருசக்கர வாகனம் எரிந்த சத்தம் கேட்டதை தொடர்ந்து வீட்டிற்குள் இருந்து உவைஸ் அகமது மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சத்தமிட்டபடி ஓடி வந்தனர். இருசக்கர வாகனம் பற்றி எரிவதை கண்டு தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்துவிட்டு உடனடியாக இது தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவின் ஆதாரத்தை வைத்து பக்ருதீனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

எல்லோருமே தன்னுடைய நண்பன் ஒரு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கினால் அதனை நாம் ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கொள்வது இயல்பான விஷயம்தான். இருந்தாலும் அந்த வாகனத்தை நமக்கு நம்முடைய நண்பர் கொடுக்க மறுத்தால் அமைதியாக திரும்புவது தான் வழக்கம். ஆனால் தன்னுடைய நண்பர் தனக்கு ஓட்டி பார்ப்பதற்கு அந்த வாகனத்தை கொடுக்கவில்லை என்ற கோபத்தில் பெட்ரோல் ஊற்றி அந்த வாகனத்தையே எரித்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsnation_Admin

Next Post

"விஜயை வைத்து படம் இயக்க ஆசை" "சர்க்கஸ்" பட இயக்குனர் கருத்து!!!

Sun Dec 4 , 2022
தற்போது தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரை வைத்து படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். காரணம் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் இவர் கொடி கட்டி பறந்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சக நடிகர், நடிகைகளே ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அது தொடர்பாக பல பிரபலங்கள் வெளிப்படையாகவே பேசிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. அந்த விதத்தில் தற்சமயம் ஹிந்தி பட இயக்குனர் […]
is rohit shetty thinking of making a project with ranveer singh thalapathy vijay heres what we know 01

You May Like