அரசியல் கடந்த நட்பு..!! அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் CM ஸ்டாலின்..!!

H Raja 2026

சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பக்கவாதம் (Stroke) காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசும் அளவிற்குத் தேறியிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இந்தச் சூழலில், இன்று மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எச்.ராஜாவின் குடும்பத்தினரைச் சந்தித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவர் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று நலம் விசாரித்தார்.

Read More : இனி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 80 நிமிடங்கள் தான் ஆகும்..!! மத்திய பட்ஜெட்டில் வெளியான மெகா அறிவிப்பு..!!

CHELLA

Next Post

பிரதமர் அலுவலகம், அமைச்சர்களின் சம்பளத்திற்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா..? பட்ஜெட்டில் வெளியான சுவாரசியமான தகவல்..!!

Sun Feb 1 , 2026
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக, அரசாங்கத்தை வழிநடத்தும் உயர்மட்ட அமைப்புகளின் நிர்வாக செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சர்களின் ஊதியம் மற்றும் படிகளுக்காக இந்த முறை நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் 483.54 கோடி ரூபாயாக இருந்த இந்த ஒதுக்கீடு, தற்போது 620 கோடி ரூபாயாக […]
Nirmala Seetharaman 2026

You May Like