சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்கின்றனர்.. மேலும் துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.. பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.. மேலும் சிவகார்த்திகேயன், சிவகுமார், மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டங்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்த மாணவி ஒருவர் ஜப்பானிய மொழியில் பேசி அசத்தினார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜாலிஷா என்ற மாணவி “ நான் முதல்வன் திட்டத்தில் அப்டேட்டில் இருந்த படிப்புகளை சொல்லிக் கொடுத்தனர்.. கடைசி ஆண்டில் வெளிநாட்டில் இண்டர்ன்ஷிப் இருப்பதாக கூறினர். எனக்கு ஜப்பான் போக வாய்ப்பு கிடைத்தது.. அங்கு நெகஸ்டன் என்ற நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்தோம்.. நிறைய கற்றுக்கொண்டோம்.. எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. கடைசி நாளில் எங்களுக்கு இண்டர்வியூ நடத்தினர்.. அதில் பங்கேற்று நாடு திரும்பினோம்.. இங்கு வந்த பிறகு எங்களுக்கு ஆண்டுக்கு 21 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது.. இப்போது ஜப்பானிய மொழி படித்துக் கொண்டிருக்கிறேன்..
இன்னும் ஒரு ஆண்டில் நாங்களும் ஜப்பானில் வேலை பார்க்க உள்ளோம்.. நாங்கள் சென்ற அனைவரும் பெண்கள்.. எனக்கு இது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. நான் முதல்வன் திட்டம் தான் எனக்கு உதவியது.. அதற்கு முதல்வருக்கும் இந்த திட்டத்திற்கும் நன்றி..” என்று தெரிவித்தார்.
அப்போது அவரிடம் ஜப்பானிய மொழியில் ஏதாவது ஒரு வார்த்தை பேச முடியுமா என்று தொகுப்பாளினி டிடி கேட்டார்.. அப்போது அந்த மாணவி, சரளமாக ஜப்பானிய மொழியில் பேசி அசத்தினார்.. ஓரிரு வார்த்தை ஜப்பானிய மொழி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சரளமாக ஜப்பானிய மொழியில் நான் முதல்வன் திட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.. விழா அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி தங்கள் பாராட்டை தெரிவித்தனர்..