பட்ஜெட் என்ற பெயரில் மாபெரும் காது குத்தும் விழா.. பத்திரிகை அடித்து நூதன முறையில் அதிமுக விமர்சனம்..!

thangam thennarasu admk

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து வருகிறார்.. தொடர்ந்து இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.


தேர்தல் நெருங்குவதால் இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் பயனளிக்கும் திட்டங்கள் இடம்பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில் பட்ஜெட் என்ற பெயரில் மாபெரும் காது குத்தும் விழா நடைபெற உள்ளது என்று பத்திரிகை அடித்து அதிமுக விமர்சனம் செய்துள்ளது.. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார் எனவும் அதிமுக நூதன முறை விமர்சித்துள்ளது.. மேலும் “ கூவம் சுத்திகரிப்புக்கு நிதி, சிங்கார சென்னைக்கு நிதி என விதமாக காதுகுத்தப்படும்.. கடந்த 4.5 ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வெகு விமரிசையாக காது குத்தும் விழா நடைபெறும் என்றும் அதிமுக விமர்சித்துள்ளது.

பின்குறிப்பு : சொத்துவரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் எஅ பல முறைகளில் மொய் வைக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : விசில் சின்னம்..!! பொதுக்கூட்டத்தில் அட்ராசிட்டி செய்த மாணவர்கள்..!! மேடையிலேயே கடுப்பான அன்புமணி..!!

RUPA

Next Post

Flash : குட்நியூஸ்.. தாறுமாறாக குறைந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா?

Tue Feb 17 , 2026
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold price prediction

You May Like