பிரதமர் மோடி தலைமையில் மதுரையில் நாளை பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..! NDA மேடையில் அண்ணா, பெரியார் படங்கள்..!

modi nda madurai

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அதன்படி அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியின் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..


தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். மேலும் தமிழகத்திற்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை என்று பிரதமர் கூறினார்.. ஆனால் தமிழகத்தில் இரட்டை என்ஜின் என்ற டப்பா என்ஜின் ஆட்சி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்..

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது பொதுக்கூட்டம் நாளை மதுரையில் நடைபெற உள்ளது.. இதற்காக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார்.. மதுரை மண்டேலா நகரில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.. இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.. பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான நுழைவு வாயிலில் பெரியார், அண்ணா படங்கள் வைக்கப்பட்டுள்ளன..  

பாஜக கூட்டணியில் திராவிட கட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் பெரியார், அண்ணா படங்களும் இடம்பெற்றுள்ளது.. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பங்கேற்க உள்ளார்.. இபிஎஸ் பங்கேற்பதை முன்னிட்டு பெரியா, அண்ணா படங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன..

Read More : சீனையே மாற்றிய காங்கிரஸ்..! திமுக உடன் மட்டுமே பேச்சுவார்த்தை.. விஜய் தலையில் இடியை இறக்கிய செல்வப்பெருந்தகை..!

RUPA

Next Post

“இதை மீறினால் மரணம் உறுதி..” ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை...! இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதலால் போர் பதற்றம்..!

Sat Feb 28 , 2026
அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]
trump 3

You May Like