பெரும் சோகம்..! பிரபல மலையாள நடிகர் – இயக்குனர் ஸ்ரீனிவாசன் காலானார்..! திரையுலகினர் இரங்கல்..!

actor sreenivasan

பிரபல மலையாள நடிகரும் இயக்குனருமான ஸ்ரீனிவாசன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.. கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.. அவருக்கு வயது 69. நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் உயிரிழந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், கடந்த பல ஆண்டுகளாக கொச்சியில் வசித்து வந்தார்.


நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணிக் குரல் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்டவராக இருந்தார்..

1976-ல் ‘மணிமுழக்கம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது இரண்டு மகன்களான வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் மலையாள திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருகின்றன.. நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Read More : ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்த வெள்ளி விலை.. இன்று தங்கம் விலை நிலவரம் என்ன?

English Summary

Renowned Malayalam actor and director Srinivasan passed away today due to illness.

RUPA

Next Post

இவர்கள் தவறுதலாக கிராம்பு சாப்பிட்டால் கூட பெரும் ஆபத்து..! மருத்துவமனைக்கு செல்ல நேரிடும்..!

Sat Dec 20 , 2025
கிராம்பு என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு சமையலறையிலும் இருக்க வேண்டிய ஒரு அத்தியாவசிய மசாலாப் பொருளாகும். உணவுகளுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பது மட்டுமின்றி, கிராம்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சிறியதாகத் தோற்றமளிக்கும் இந்த கிராம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக இரவில் தூங்கச் செல்வதற்கு முன் கிராம்பு சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சரியான அளவில் கிராம்பு எடுத்துக்கொள்வது பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் […]
cloves

You May Like