கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காந்திநகர் வானவில் நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 48 வயது மதிக்கத்தக்க டிரைவர் செல்வராஜ் மற்றும் 23 வயது இளம் பெண் காயத்ரி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டனர்.
இறந்தவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், செல்வராஜ், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல, உயிரிழந்த காயத்ரி ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரின் மனைவி என்றும், இவர்களுக்கு ஒன்றரை வயதில் சுஜன் என்ற ஆண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
நண்பரான குணசேகரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது, செல்வராஜுக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஓசூரில் வாடகை வீட்டை எடுத்து அவ்வப்போது தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் அந்த வீட்டுக்குள் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு காயத்ரி தலையணை அருகில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். அதே வீட்டில் உள்ள படுக்கை அறையில் செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்தார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், செல்வராஜ் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், செல்வராஜ் கள்ளக்காதலி காயத்ரியை கொலை செய்துவிட்டு, பின்னர் பயத்தில் செல்வராஜ் குழந்தையை அருகில் வசித்த ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு, வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : ஆண்ட்டியை விட்டு வைக்காத இளைஞன்..!! உண்மை தெரிந்தும் ஓயாத உல்லாசம்..!! கடைசியில் திடுக்கிடும் சம்பவம்..!!