வாடகைதாரர்களுக்கு ஜாக்பாட்..!! இன்று முதல் வீட்டு வாடகையில் அதிரடி மாற்றம்..!! இனி 2 மாத வாடகை மட்டுமே அட்வான்ஸ்..!!

Home Rent 2026

தமிழ்நாட்டில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை முறைப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாடகை சட்ட மாற்றங்கள் இன்று (2026 ஜனவரி 1) முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றன. வாடகை ஒப்பந்தங்கள் முதல் முன்பணம் (Deposit) வரை பல முக்கிய அம்சங்களில் நிலவி வந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


பதிவு மற்றும் ஒப்பந்த விதிகள் : புதிய சட்டத்தின்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கட்டாயம் எழுத்துப்பூர்வமாக மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்களைச் சட்டப்படி பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் உள்ளூர் வாடகை ஆணையத்தில் (Rent Authority) அதனை பதிவு செய்ய வேண்டியது இனி கட்டாயமாகும். இதன் மூலம் வாய்மொழி ஒப்பந்தங்களால் ஏற்படும் தேவையற்ற சட்டச் சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

வாடகை உயர்வு மற்றும் வைப்புத் தொகை : வாடகைதாரர்களைப் பாதிக்கும் மிக முக்கியமான அம்சம் ‘முன்பணம்’ மற்றும் ‘வாடகை உயர்வு’ ஆகும். இனிமேல் வாடகைக்குச் செல்பவர்களிடம் அதிகபட்சமாக இரண்டு மாத வாடகையை மட்டுமே பாதுகாப்பு வைப்புத் தொகையாக (Security Deposit) வீட்டு உரிமையாளர்கள் பெற முடியும். உதாரணமாக, மாத வாடகை ரூ. 20,000 என்றால், முன்பணமாக ரூ. 40,000 மட்டுமே கேட்க முடியும். அதேபோல், ஆண்டுதோறும் வாடகையை உயர்த்தும்போது அது 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது; அப்படியே உயர்த்தினாலும் மூன்று மாதங்களுக்கு முன்பே வாடகைதாரருக்கு முறைப்படி அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.

வரி விதிப்பு மற்றும் கண்காணிப்பு : சொத்தின் ஆண்டு மதிப்பிற்கு ஏற்பவே வாடகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரி விதிகளின்படி, வாடகை வருமானம் என்பது வீட்டுச் சொத்து வருமானமாக கருதப்படும். இந்த மாற்றங்கள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், விதிமீறல்களில் ஈடுபடும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. புத்தாண்டின் முதல் நாளில் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றங்கள், வாடகை சந்தையில் ஒரு வெளிப்படையான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : காலையிலேயே ஷாக்..!! ஒரே நேரத்தில் விசிக-வில் இருந்து 48 மாவட்ட செயலாளர்கள் நீக்கம்..!! திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு..!!

CHELLA

Next Post

2026இல் தங்கம் விலை எப்படி இருக்கும்..? ஒரு சவரன் ரூ.1.50 லட்சத்தை தாண்டுமா..? நிபுணரின் அதிர்ச்சி கணிப்பு..!!

Thu Jan 1 , 2026
2026-ஆம் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, வரலாற்றில் இல்லாத வகையில் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த அதிரடி உயர்வு நடப்பு ஆண்டிலும் தொடருமா என்பது குறித்து பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஆனந்த் சீனிவாசன் குறிப்பிடுகையில், சர்வதேச சந்தையில் தங்கம் […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like