தமிழக மக்களுக்கு ஜாக்பாட்! பொங்கல் பரிசுத் தொகை.. முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்?

pongal gift stalin

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை..


இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 2026 பொங்கல் பண்டிகையின்போது மீண்டும் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ரொக்கப் பணம் வழங்கத் தமிழக அரசு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது.

இதனிடையே 2026 பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்தது..

இந்த அறிவிப்பால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் தானா? ரொக்கப்பணம் கிடையாதா என்ற கேள்வி எழுந்தள்ளது.. இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் பேசிய போது “ ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதல் செய்வதற்காக தான்.. இதற்கு முன்கூட்டியே பணம் ஒதுக்கி கொடுத்தால் பொருட்களை பெற முடியும்.. ஆனால் ரொக்கப்பணம் எவ்வளவு என்பதை நிதித்துறை உடன் முதலமைச்சர் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது.. பணத்தை உடனடியாக பெற்று ரேஷன் கடைகளுக்கு வழங்க முடியும்..” என்று தெரிவித்தார்..

எனவே பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது.. ஆனால் அது ரூ.5,000 அல்லது ரூ.3000 அல்லது ரூ.2000 நிதி எவ்வளவு தேவைப்படுகிறது.. என்று அரசு கணக்கிட்டு வருகிறது.. பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

பொங்கல் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 8-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்..

Read More : அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கை.. முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடப் போகும் ஜாக்பாட் அறிவிப்பு..!

RUPA

Next Post

எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் செங்கோட்டையன்..!! அதிமுக கூடாரமே காலியாக போகுது..!! குஷியில் விஜய்..!!

Sat Jan 3 , 2026
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தவெக-வை நோக்கிப் படையெடுப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் மூத்த நிர்வாகியாக இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் ‘ஆபரேஷன் மாற்றுக்கட்சி’ […]
EPS Sengottaiyan Vijay 2025

You May Like