தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் பெண்களுக்கு, புதிய குடும்ப அட்டை (Ration Card) தொடர்பான மிக முக்கியமான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவியைப் பெறுவதற்குத் தகுதியுள்ள பெண்கள், திருநங்கைகள் மற்றும் தனித்து வாழும் திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரில் தனியான ரேஷன் கார்டை வைத்திருப்பது அடிப்படை தேவையாகும். குறிப்பாக, புதிதாக திருமணமானவர்கள் மற்றும் இதுவரை குடும்ப அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிப்பதே பாதுகாப்பானது.
ஏன் இப்போதே விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தால், கள ஆய்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பு முடிந்து கார்டு கைக்குக் கிடைக்க குறைந்தது 6 மாதங்கள் வரை ஆகலாம். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படலாம் அல்லது புதிய பயனாளிகள் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது TNPDS என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை, சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வசிப்பிட சான்றிற்காக வீட்டு வரி ரசீது அல்லது வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்கள் அவசியமாகும். கடந்த முறை இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, தகுதியிருந்தும் ரேஷன் கார்டு இல்லாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Read More : தவெக-வுக்காக பிரத்யேகமாக டிவி சேனலை தொடங்கும் விஜய்..!! முன்னணி நிறுவனத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை..!!



