அடுத்த ஷாக்..! 300 பேரை பணிநீக்கம் செய்யும் முன்னணி நிறுவனம்..! கலக்கத்தில் ஊழியர்கள்..! என்ன காரணம்?

Coke 1 1

இந்தியாவில் கோகா-கோலா நிறுவனத்தின் பாட்டிலிங் பிரிவு ஹிந்துஸ்தான் கோகோ கோலா (Hindustan Coca-Cola Beverages HCCB), லாபத்தை அதிகரிக்கவும், செயல்பாடுகளை மேலும் திறம்பட மாற்றவும் மேற்கொள்ளப்படும் உள் மறுசீரமைப்பு (restructuring) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுமார் 300 பணியிடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளது..


இந்த முடிவு கடந்த இரண்டு வாரங்களாக அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. HCCB இந்தியா முழுவதும் சுமார் 5,000 ஊழியர்களை வேலைக்கு வைத்திருக்கிறது. நாடு முழுவதும் 15 உற்பத்தி தொழிற்சாலைகள் நடத்தி வருகிறது. கோகோ கோலா (Coca-Cola), தம்ப்ஸ் அப் (Thums Up), ஸ்ப்ரைட் (Sprite), மினிட் மெயிட் (Minute Maid), கின்லே (Kinley) போன்ற பிரபல பானங்களை பாட்டிலிங் செய்து விநியோகிக்கின்றன.

HCCB நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது “மாறிக்கொண்டிருக்கும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப எங்கள் திறன்கள், அமைப்புகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இது வழக்கமான வணிக ஆய்வு நடைமுறையின் ஒரு பகுதியாகும்.” என்று தெரிவித்தார்..

இந்த பணி நீக்கம் மிகப்பெரிய அளவில் இல்லை என்றும், நிறுவனத்தின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படாது அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.. போட்டித்திறனை தக்க வைத்துக்கொள்ள அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எனவும் கூறியுள்ளது.

வேலைநீக்கம் யாரை பாதிக்கும்?

மொத்த ஊழியர்களில் 4% முதல் 6% வரை இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம். விற்பனை, சப்ளை செயின் / விநியோக மேலாண்மை, விநியோகப் பணிகள், தொழிற்சாலை பாட்டிலிங் பணிகள் போன்ற பிரிவுகள் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

புதிய தலைமைத்துவத்தின் கீழ் மறுசீரமைப்பு

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை புதிய தலைமைத்துவத்தின் கீழ் நடைபெறுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் HCCB நிறுவனத்தின் புதிய CEO ஆக ஹேமந்த் ரூபானி நியமிக்கப்பட்டார். அவர் முன்பு Mondelez International நிறுவனத்தில் மூத்த நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர். HCCB நிறுவனத்தில் தற்போது நடைபெறும் பணியாளர் குறைப்புகளுக்கு முக்கிய காரணம், நிறுவனத்தின் லாபத்தில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி மற்றும் பானங்களுக்கு குறைந்த தேவை ஆகும்.

லாபத்தில் பெரிய வீழ்ச்சி

2024–25 நிதியாண்டில் HCCB நிறுவனத்தின் நிகர லாபம் 73% குறைந்து ₹756.64 கோடியாக விழுந்துள்ளது. அதே நேரத்தில், செயல்பாட்டு வருமானம் 9% குறைந்து ₹12,751.29 கோடி ஆகியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம், 2023–24 ஆம் ஆண்டில் (FY24) HCCB தனது சில மாநிலங்களில் உள்ள சில தொழிற்சாலைகளை விற்பனை செய்திருந்தது.

ராஜஸ்தான், பீகார், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் இருந்த இந்த பாட்டில் தொழிற்சாலை உரிமைகள் Moon Beverages, Kandhari Global Beverages, SLMG Beverages ஆகிய franchise நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. அந்த ஆண்டு இந்த விற்பனையால் HCCB-க்கு அதிக வருமானம் வந்தது. ஆனால் FY25-ல் அந்த வருமானம் இல்லாததால், லாபத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்தியாவில் Coca-Cola நிறுவனம் franchise அடிப்படையிலான மாடல் மூலம் செயல்படுகிறது. அதாவது Coca-Cola நேரடியாக விற்பனை செய்யாமல், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் பானங்களை தயாரித்து விநியோகிக்கின்றன. இதனால் பாட்டில் தயாரிக்கும் உரிமை உரிமை யார் கையில் இருக்கிறதோ அதைப் பொறுத்து வருமானமும் லாபமும் மாறுபடும்.

தேவை குறைவு – வானிலை தாக்கம்

FY25-ல் பானங்களுக்கு தேவை குறைவாக இருந்தது. அசாதாரணமான கனமழை, குறிப்பாக மார்ச் முதல் செப்டம்பர் வரை உள்ள கோடை காலத்தில் மழை பெய்தது இதற்கு முக்கிய காரணம்.. பொதுவாக ஏப்ரல் – ஜூன் காலம் தான் குளிர்பானங்களுக்கு மிக முக்கியமான சீசன். ஆனால் அந்த காலத்தில் மழை காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் குளிர்பான சந்தையின் மதிப்பு சுமார் ரூ.60,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. அந்த முக்கிய கோடை காலத்தில் விற்பனை குறைந்ததால் HCCB மட்டுமல்ல, பல பான நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

RUPA

Next Post

கிறிஸ்துமஸ் என்றாலே பிளம் கேக்.. இந்த பாரம்பரியம் எப்போது தொடங்கியது தெரியுமா..?

Wed Dec 24 , 2025
Plum cake is synonymous with Christmas.. When did this tradition start?
Eggless Christmas Plum Cake 1

You May Like