வங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எப்போது புயலாக மாறும்? வானிலை மையம் முக்கிய தகவல்!

Cyclone 2025 1

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது..


இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

அக்.27-ம் தேதி தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக வலுப்பெறும்.. சென்னைக்கு 990 கி.மீ கிழக்கு தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.. வங்கக்கடல், அரபிக் கடல் இரண்டிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது..

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கிமீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்கிறது.. கர்நாடகாவின் மங்களூருக்கு 640 கி.மீ வடமேற்கு திசையில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.. புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! நவ.30-ம் தேதி கடைசி நாள்…!

RUPA

Next Post

அஜித்தின் புதிய அவதாரம்..!! குடும்பத்துடன் குல தெய்வ தரிசனம்..!! மார்பில் குத்தியிருக்கும் டாட்டூவின் ரகசியம்..!!

Sat Oct 25 , 2025
திரைப்படங்கள் மற்றும் தனது விருப்பமான கார் பந்தயம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, அஜித் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டில், மகிழ் திருமேனி இயக்கத்தில் […]
Ajith 2025

You May Like