வங்க கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கெல்லாம் மழை பெய்யும்..? – முழு விவரம்

rain 1

தமிழகத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஓட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையி்ல் தான் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.


இந்த நிலையில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மேற்கு வங்கம் – வங்கதேசம் கடற்கரை பகுதியில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (25.07.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (26.07.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் (27.07.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28-ந் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 3 மாதம் பழச்சாறு டயட்.. உடல் எடையை குறைக்க முயன்ற பிளஸ்-2 மாணவன் பலி..!! குமரியில் சோகம்..

English Summary

A low pressure area has strengthened in the Bay of Bengal.. Where will it rain..? – Full details

Next Post

Intel பணிநீக்கம்.. 25,000 பணியிடங்களுக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..

Fri Jul 25 , 2025
Intel நிறுவனம் 25,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. உலகளவில் பல பெரும் தொழில்நுட்பங்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.. கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றன.. அந்த வகையில் இன்டெல் (Intel ) நிறுவனம் ஒரு பெரிய அளவிலான மறுசீரமைப்புக்குத் தயாராகி வருவதால், 25,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக […]
intel layoffs 255243285

You May Like