வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…! வானிலை மையம் தகவல்…!

Cyclone 2025 1

தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக அமைந்துள்ளது.

Vignesh

Next Post

முகமது ரிஸ்வான் அதிரடி நீக்கம்!. ஒரே வருடத்தில் 3வது முறையாக பாக்., ODI கேப்டன் மாற்றம்!. புதிய கேப்டன் இவர்தான்!.

Tue Oct 21 , 2025
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகளும் பைசலாபாத்தில் நடைபெறும். ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் பெயரிடப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பாகிஸ்தான் திங்கள்கிழமை (அக்டோபர் 20) நியமித்தது, இது கடந்த 12 மாதங்களில் ஒருநாள் வடிவத்தில் மூன்றாவது தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது. […]
Rizwan removed

You May Like