ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வந்த லுஃப்தான்சா விமானம், இன்று அதிகாலை மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பியது.. பயணிகள் இந்தியாவில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டதால் விமானம் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது..
போயிங் 787-9 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்படும் LH752 விமானம், நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 14.14 மணியளவில் ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை அதிகாலை ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கு புறப்பட்டது..
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு (ATC) விமானம் ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பிராங்பேர்ட்டுக்குத் திரும்புவதாக அறிவிப்பு வந்தது. இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் இங்கு தரையிரங்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது..
விமான பயணி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “நாங்கள் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு பிராங்பேர்ட்டில் தரையிறங்கினோம், ஹைதராபாத்தில் தரையிறக்க அனுமதி வழங்கவில்லை என்று மட்டுமே எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது..” என்று அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள தனது தாயாரைப் பார்க்க சென்ற பெண் பயணி கூறினார்.
“இது ஒரு சுமுகமான விமானப் பயணம், சுமார் 2 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நாங்கள் பிராங்பேர்ட் விமான நிலையத்திற்கு திரும்புவோம் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது விமான நிலையத்தில், அவர்கள் எங்களுக்கு இரவு தங்குமிடம் வழங்குகிறார்கள், நாளை காலை 10 மணிக்கு அதே விமானத்தில் புறப்படுவோம் என்று எங்களிடம் கூறியுள்ளனர்.” என்று அவர் கூறினார்.
பிராங்பேர்ட் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர், LH752 ஜெர்மனியில் மீண்டும் தரையிறங்கியதை உறுதிப்படுத்தினார். மேலும் பிராங்பேர்ட் விமான நிலையத்திற்கு விமானம் மீண்டும் திருப்பப்பட்டது.. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கூட்டாட்சி காவல்துறை அல்லது விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்,” என்று தெரிவித்தார்..
Read More : நடுவானில் புகை.. அவசர அவசரமாக தரையிரக்கப்பட்ட லண்டன் விமானம்..!! பெரும் பரபரப்பு..