மகளிர் உரிமைத்தொகையில் வருகிறது முக்கிய மாற்றம்.. இனி இவர்களுக்கு பணம் கிடைக்காது..!

magalir urimai thogai 2025

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது.

கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும் குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதம் தோறும் 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மகளிர் உரிமைத்தொகை திட்ட மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. இதனால் விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

Read more: ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? அப்படினா இந்த கொடிய நோயை எதிர்த்து போராட தயாரா இருங்க..!!

English Summary

A major change is coming to women’s rights.. They will no longer receive money..!

Next Post

மிரட்டி விட்ட ‘காந்தாரா சாப்டர் 1’..!! மெகா பிளாக்பஸ்டர்..? யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ்..!! படம் எப்படி இருக்கு..?

Thu Oct 2 , 2025
ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட இந்திய படைப்பாக வெளியாகி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. முதல் பாகமான ‘காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பும், அதில் இருந்த தெய்வீகத் தன்மையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. கதைக்களம் […]
Kantara Chapter 1 2025

You May Like