தொடர்ந்து காதலிக்க மறுத்த பெண்! தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற காதலன் தப்பி ஓட்டம்!

சேலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் செங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விவசாயியான முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகேசனின் இரண்டாவது மகளான ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூர் அருகே உள்ள தண்டவராயபுரம் பகுதியைச் சார்ந்த நீலகிருஷ்ணன் என்பவரது மகன் சாமிதுரை இவருடன் மழையில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு செல்லும் போது ரோஜாவை பார்த்து அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்


இதனைத் தொடர்ந்து மாணவியின் ஊருக்கு அடிக்கடி சென்று அவரைப் பார்த்து வருவது பேருந்தில் பின் தொடர்வது என ஒரு தலையாக ரோஜாவையே சுத்தி வந்திருக்கிறார் சாமிதுரை. மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டவும் செய்து இருக்கிறார். இந்த விஷயம் ஊர்க்காரர்களுக்கு தெரிய வரவே அவர்கள் இரண்டு ஊர்களிலும் உள்ள பெரிய ஆட்களை கூட்டி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவை கொலை செய்ய முடிவு எடுத்து அவரது வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து அங்கு வந்த சாமிதுரை தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி ரோஜாவை மீண்டும் மிரட்டி இருக்கிறார். பின்னர் கோபத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து ரோஜாவின் மீது ஊற்றி அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பின்னர் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து ரோஜாவின் தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரை தடுக்க வந்த குடும்பத்தினரையும் அடித்து காயப்படுத்தி இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் சாமிதுரை. இச்சம்பவத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரோஜாவை மீட்டு ஆரம்ப சுகாதார மையம் அழைத்துச் சென்றனர் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சாமி துறையை தேடி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

1newsnationuser5

Next Post

விண்வெளியிலும் உடலுறவு செய்யலாம்!... புதிய திட்டத்தை கொண்டுவந்த நாசா!... கட்டணம் இத்தனை கோடியா?

Tue Apr 4 , 2023
காதலர்கள் விண்வெளியிலும் உடலுறவு செய்து கொள்ளும் வகையில் புதிய திட்டத்தை நாசா கொண்டுவந்துள்ளது. அதன்படி இதற்காக கட்டணம் நிர்ணயித்து முன்பதிவும் தொடங்கவுள்ளது. விண்வெளியில் இதுவரை யாரும் உடலுறவு கொள்ளவில்லை. ஆனால் தற்போது இதனை சாத்தியப்படுத்தும் வகையில் நாசா ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது புதிய காதல் உலகத்திற்கான ஆயத்தங்களை நாசா நிறைவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு 68-mile high club எனவும் நாசா பெயரிட்டுள்ளது. இந்த கிளப்பில் சேருவதன் […]
Space Station

You May Like