டாக்ஸிக்காக காத்திருந்தபோது, பட்டப்பகலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு மாடல் அழகி புகார் அளித்துள்ளார். தனது அருகில் நின்ற ஒரு நபர், தனது பேண்டின் ஜிப்பை அவிழ்த்துவிட்டு, தனக்கு முன்னால் சுயஇன்பம் செய்யத் தொடங்கியதாக அப்பெண் கூறினார். அந்த நபரின் இந்த கேவலமான செயலை படமாக்கிய அந்த பெண், அதனை தனது சமூகவலைதள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்..
இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில் பேசிய அந்த பெண் “ ஜெய்ப்பூரிலிருந்து திரும்பிய போது, காலை 11:00 மணியளவில் தனது டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.. அவர் தொடர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்… பின்னர் அவரது பேண்ட் ஜிப்பை அவிழ்த்ததை நான் கவனித்தேன். அவர் உண்மையில் வெறித்துப் பார்த்து என் முன் சுயஇன்பம் செய்யத் தொடங்கினார்,” என்று கூறியுள்ளார்..
முழு சம்பவத்தையும் விவரித்துள்ள அந்த பெண், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.. மேலும் “ஆரம்பத்தில் நான் உறைந்து போனேன். நான் பதிவு செய்யவில்லை, நான் அவரை அடிக்கவில்லை. நீங்கள் கத்தியிருக்கலாம் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அந்த நேரத்தில் ஒரு பெண்ணின் மனதில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்..
பெண்கள் உதவி எண் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள சிரமப்பட்டதாகவும், இறுதியில் அருகிலுள்ள காவல் நிலைய எண்ணை ஆன்லைனில் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், வீடியோவில் உள்ள ஆணுக்கு எதிராக எழுத்துப்பூர்வ புகார் அளிக்க நேரில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.
வீடியோ வைரலான பிறகு வழக்கு பதிவு
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.. அந்த மாடல் அழகிக்கு 35,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளனர். பல பயனர்கள் குருகிராம் காவல்துறை மற்றும் ஹரியானா அரசாங்கத்தை கருத்துகள் பிரிவில் டேக் செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. தற்போது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பல பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் சந்தீப், FIR ஐ உறுதிப்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார். “விசாரணையின் போது வெளியாகும் உண்மைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்..