ஈராக்கில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில் உள்ள ஒரு 5 மாடி கட்டிட ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது.. இந்த கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி இதுகுறித்து பேசிய போது ” புதன்கிழமை இரவு ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட துயர தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 50 பேரை எட்டியுள்ளது,” என்று கூறியுள்ளார்.
ஹைப்பர் மாலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் விசாரணையின் ஆரம்ப முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாகாணத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஆளுநர் அறிவித்தார்.. மேலும் கட்டிடம் மற்றும் மால் உரிமையாளருக்கு எதிராக அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று கூறினார்.
5 நாட்களுக்கு முன்புதான் இந்த மால் திறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.. முதல் மாடியிலோ அல்லது கட்டிடத்திலோ தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.. தீப்பிழம்புகள் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றதையும் அதில் பார்க்க முடிகிறது..
Read More : மனித ரத்தத்தில் இயங்கும் ஆபத்தான டேங்க்-ஐ உருவாக்கிய ஹிட்லர்? இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது?