காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் அடுத்த அசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகங்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அசூர் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று தொழிலாளர்கள் பணி புரிந்து வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் சிலர் மூச்சு விட சிரமம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்திர மேரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தார் கொளுந்து விட்டு எறிகிறது. இதனால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் புகை சூழாத, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கார்களா? விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Read more: அது என்ன Fake Wedding..? இந்தியாவில் வைரலாகும் இந்த பார்ட்டி ட்ரெண்ட் பற்றி தெரியுமா?