தமிழ்நாட்டில் சிக்கிய மெகா பாலியல் கும்பல்..!! ரெய்டில் சிக்கிய ஐடி இளம்பெண்கள்..? ஆடிப்போன காவல்துறை..!!

Prostitution 2025

தமிழ்நாட்டில் சமூக சீரழிவை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழில்களை கண்டறிந்து அதை ஒழிக்க காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டத்தில் ஐடி ஊழியர்கள் என்ற போர்வையில் மறைமுகமாக இயங்கி வந்த பாலியல் தொழிலை வேலூர் தனிப்படை போலீசார் தவிடு பொடியாக்கினர்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சில தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருப்பதாக எஸ்பி மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், நேதாஜி சவுக் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு தங்கியிருந்த இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள், தாங்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிவதாகவும், அலுவல் காரணமாக தங்கியிருப்பதாகவும் கூறி போலீசாரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால், அவர்களின் அடையாள அட்டைகளை ஆய்வு செய்தும், தனித்தனியாக விசாரணை நடத்தியும் போலீசார் உண்மையை வெளிக்கொண்டு வந்தனர்.

போலீசாரின் சோதனையில், 4 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தம் 16 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் ஐடி ஊழியர்கள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சந்தேகம் வராதபடி நீண்ட நாட்களாக பாலியல் தொழிலை திட்டமிட்டு நடத்தி வந்துள்ளனர். இதேபோல், சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 3 பெண்களை மீட்டதுடன், இடைத்தரகர் உட்பட இருவரை சிறையிலடைத்தனர். கைதானவர்கள் மீது குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : பரிகாரத்திற்கு வந்த பெண்ணுடன் உடலுறவு..!! ஜோதிடர் பார்த்த பலான வேலை..!! நேரில் பார்த்த மகள்கள்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

CHELLA

Next Post

இந்த அரிய ரூ.10 நோட்டு இருக்கா? ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா?

Fri Feb 6 , 2026
சில இந்திய ரூபாய் நோட்டுகள் சேகரிப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து பெரும் ஆர்வத்தை ஈர்க்கின்றன.. இந்த ரூபாய் நோட்டுகள், சில சமயங்களில் லட்சக்கணக்கில் விலையைப் பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட வரிசை எண் கொண்ட அரிய ரூ.10 நோட்டு ஆன்லைனில் ஒரு மதிப்புமிக்க பொருளாக மாறியுள்ளது, உங்களிடம் அப்படி ஒன்று இருந்தால், நீங்கள் எதிர்பாராத ஒரு பெரிய தொகையைப் பெறக்கூடும். சில 10 ரூபாய் நோட்டுகள் ஏன் அதிக தேவைப்படுகின்றன? ஒவ்வொரு ரூ. […]
old 10 rs note

You May Like