கடற்கரையில் ஒதுங்கிய மர்ம விலங்கு..!! ஹாலிவுட் படத்துக்கே இன்ஸ்பிரேஷன்..!! அது என்ன உயிரினம் தெரியுமா..?

Montauk Monster 2025

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலாந்து கடற்கரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு விசித்திரமான விலங்கின் உடல் ஒதுங்கியது. இதற்கு “மான்டாக் மான்ஸ்டர்” என்று பெயரிடப்பட்டது. இந்த விலங்கின் தோற்றம் மிகவும் வினோதமாக இருந்ததால், இது ஏதோ அரசு ஆய்வகத்தில் இருந்து தப்பி வந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினமாக இருக்கலாம் அல்லது இதுவரை யாரும் பார்த்திராத புதிய விலங்காக இருக்கலாம் எனப் பலவிதமான வதந்திகளும் கற்பனைகளும் பரவின.


அந்த விலங்கின் உடல் அழுகிய நிலையிலும், அடையாளம் காண முடியாத வடிவிலும் இருந்ததுதான் இவ்வளவு மர்மத்திற்கு காரணம். விஞ்ஞானிகள் இந்த உடலை ஆய்வு செய்தபோது, அந்த மர்மம் விலகியது.

உண்மை என்ன..?

விஞ்ஞானிகளின் ஆய்வில், அது முற்றிலும் அழுகிப்போன ராக்-கூன் (Raccoon) எனப்படும் சாதாரண விலங்குதான் என்பது உறுதியானது. அந்த உடல் நீரில் ஊறிப் பல நாட்கள் கிடந்ததால், வீங்கிப்போய், அதன் மேல் இருந்த உரோமங்கள் உதிர்ந்துவிட்டன. இதனால் அதன் சதைப்பகுதிகள் பலவும் சிதைந்து போயின.

அதன் முகத்தின் சதைப்பகுதி அழுகி நீங்கியதால், தாடை மற்றும் முகத்தின் எலும்புகள் வெளியே தெரிந்தன. இது பார்ப்பதற்கு ஒரு விசித்திரமான ‘அலகு’ போலத் தோற்றமளித்தது. அதன் பற்கள், கால்கள் மற்றும் பாதங்களின் அமைப்பு ஒரு ராக்-கூனுக்குரியது போலவே இருந்தது. ஒரு சாதாரண விலங்கின் உடல் அழுகும்போது, அதன் தோற்றம் எப்படிப் பயங்கரமாக மாறிவிடும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என நிபுணர்கள் விளக்கினர்.

இந்த மர்ம விலங்கின் பின்னணியில், அருகிலுள்ள ஒரு அரசு ஆய்வகம் குறித்த சந்தேகங்கள் அப்போது எழுந்தன. இந்த ஒட்டுமொத்த மர்மமும் “மான்டாக் ப்ராஜெக்ட்” என்ற பெயரில் சதித் திட்ட கோட்பாடாக மாறியது. இந்த மர்மக் கதைகள் தான், நெட்ஃபிக்ஸின் உலகப் புகழ் பெற்ற தொடரான ‘Stranger Things’ சீரிஸ் உருவாகுவதற்கே உத்வேகமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் மான்டாக் என்பது, அழகிய கடற்கரைகள், மீன்பிடித்தல் மற்றும் ஒரு பழமையான கலங்கரை விளக்கம் (Montauk Point Lighthouse Museum) ஆகியவற்றிற்காக பிரபலமாக இருக்கும் ஒரு சுற்றுலாத் தலமாகும்.

Read More : ஈஸியாக இனி டிக்கெட்… ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறையில் திருத்தம்… மத்திய அமைச்சர் தகவல்..!

CHELLA

Next Post

நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம்...!

Fri Dec 12 , 2025
வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் […]
bank 2025

You May Like