நள்ளிரவில் வி.கே.சசிகலா வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் வீடு சென்னை போயஸ்கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்ததாக மர்ம நபர் பிடிபட்டுள்ளார். அவர் நள்ளிரவு நேரத்தில் சசிகலாவின் வீட்டிற்கு நுழைந்ததாக கூறி அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நிலையில், அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இந்த சூழலில் தான், தற்போது வி.கே.சசிகலாவின் வீட்டிற்குள்ளும் மர்ம நபர், நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.