வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.. விஜய் வாகனத்தை பின் தொடரக் கூடாது என்று விதிமுறை இருந்த போதிலும் தவெக தொண்டர்கள் பலரும் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஜல்லக்கட்டு காளை தொடர்பான தனது உரையை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் “ ஒரு பெரிய ஊர்.. 4 ரோடு இணையும் மாதிரி ஒரு ஜங்ஷன்.. அங்கு மத்தியில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்று கொண்டிருக்கிறது.. யாருமே பக்கத்தில் செல்ல முடியவில்லை.. அந்த காளையை அடக்கி அமைதியாக்கினால் தான் இயல்பு நிலை திரும்பும்.. அந்த ஊரில் இருந்த ஒரு சிலருக்கு மட்டுமே காளைகள் அடங்கும்..
அந்த கூட்டத்தில் இருந்த சிலர் எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்கள் பார்க்காத காளையா என்று காளையை அடக்க முயன்றனர்.. ஆனால் காளையை அடக்க முடியவில்லை.. அப்போது ஒரு சின்ன பையன் காளையை அடக்க செல்கிறேன்.. அந்த சிறுவனை ஏளனமாக பேசினர்.. மறுபுறம் சில பரிதாபத்துடன் பேசினார்கள்.. எதையும் கண்டுகொள்ளாத அந்த சிறுவன் கெத்தாக, ஸ்டைலாக போகிறான்.. அப்போது தன் கையில் வைத்திருந்த புல்லுக்கட்டை காட்டுகிறான்.. அந்த காளையும் அமைதியாகி புல்கட்டை சாப்பிட்டது.. பின்னர் அந்த சிறுவனுடன் ஜாலியாக காளை நடந்து சென்றது..
அந்த சிறுவனை கிண்டல் செய்தவர்கள் தலையை குனிந்து கொண்டனர்.. அங்கு வந்த பெரியவர் எப்படி காளையை அடக்கினாய் என்று கேட்டார்.. அதற்கு அந்த சிறுவன், காளை கோபத்துடன் இல்லை, பசி உடன் இருந்தது.. புல் கட்டை கொடுத்த உடன் அது அமைதியாகிவிட்டது.. என்று சொன்னார்.. ஒரு பிரச்சனையை எப்படி கையாள வேண்டும் என்பது தான் முக்கியம்.. அந்த காளை தான் தமிழ்நாட்டின் அரசியல் களம், அந்த பெரியவர் தான் மக்கள், ஸ்டைலாக வந்த சின்ன பையன் தான் தவெக.” என்று கூறி குட்டிக்கதையை முடித்தார்.
Read More : சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? விவரம் இதோ..!



