தவெகவில் வெடித்த புதிய போர்..!! கட்சியில் இருந்து வெளியேறும் ஜான் ஆரோக்கியசாமி..? அதிர்ச்சியில் விஜய்..!!

John TVK 2026

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் அதிகாரப் போட்டி முற்றியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. கட்சியின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராக கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே விஜய்யின் அரசியல் பிம்பத்தை வடிவமைப்பதிலும், மாநாடுகளைத் திட்டமிடுவதிலும் ஜான் ஆரோக்கியசாமி முதுகெலும்பாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவின் ஆதிக்கம் அதிகரித்ததே இந்த விரிசலுக்கு அஸ்திவாரமாக அமைந்தது. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ அலுவலகத்திலிருந்து ஜான் ஆரோக்கியசாமியின் குழுவினர் ஒட்டுமொத்தமாக வெளியேறியிருப்பது, இருவருக்கும் இடையிலான மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளது.

ஜான் ஆரோக்கியசாமியின் மெதுவான மற்றும் திட்டமிட்ட வியூகங்களை காட்டிலும், ஆதவ் அர்ஜுனாவின் அதிரடியான பேட்டிகள் மற்றும் தன்னிச்சையான அறிக்கைகள் விஜய்யை கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. தனது முக்கியத்துவம் குறைந்து வருவதை உணர்ந்த ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா அளித்த மெகா விருந்து உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை புறக்கணித்தார். அதுமட்டுமின்றி, கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பலரும் ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்ததும் அவரது விலகல் முடிவுக்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் வெற்றிக்கு சரியான திசையை காட்ட வேண்டிய வியூக வகுப்பாளரே வெளியேறுவது விஜய்க்குப் பெரும் சவாலாக அமையும். விஜய்யின் அரசியல் பயணத்தில் ஜான் ஆரோக்கியசாமி ஒரு முக்கிய தூணாகப் பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் மாற்றம் கட்சியின் எதிர்காலத் திட்டங்களை எப்படிப் பாதிக்கும் என்பது விவாதத்திற்குரியதாகியுள்ளது. இதுவரை தவெக தலைமை இது குறித்து அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை என்றாலும், திரைமறைவில் நிலவும் இந்தப் போர் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : குலதெய்வத்தை எந்த நாளில் வழிபட்டால் முழுமையான அருள் கிடைக்கும்..? உகந்த நேரமும் ரகசிய முறைகளும்..!!

CHELLA

Next Post

விஜய் பெயரை சொல்லி பாஜகவை மிரட்டும் ஓபிஎஸ்..? அதிமுகவில் இணைய மாஸ்டர் பிளான்..!!

Thu Feb 5 , 2026
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்து வரும் அதிரடி நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், பாஜக கூட்டணியிலும் தமக்கான பிடி நழுவி வருவதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், தற்போது தனது அரசியல் வாழ்வை தக்கவைக்க புதிய வியூகங்களை கையாண்டு வருகிறார். சமீபகாலமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக […]
vijay ops

You May Like