சீனாவில் இருந்து மீண்டும் படையெடுக்கும் புதிய வகை வைரஸ்..!! பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்..! WHO எச்சரிக்கை

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக மக்களை பாடாய்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில், மிக வேகமாக பரவும் திறன் கொண்ட 2 புதிய வகை மாறுபாடுகள் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமைக்ரான் வைரஸின் பிஎப் 7 மற்றும் பிஏ.5.1.7 வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து மீண்டும் படையெடுக்கும் புதிய வகை வைரஸ்..!! பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்..! WHO எச்சரிக்கை

இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், பிஎப் 7, பிஏ.5.1.7 வகை மாறுபாடுகள் மிகவும் எளிதாக தொற்றும் தன்மை கொண்டவை. இதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பிஎப் 7 மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், கொரோனா தடுப்பூசிகள் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படாமலும், வைரஸால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளனர். மேலும், இந்த பிஎப் 7 வகை மாறுபாடு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

CHELLA

Next Post

SBI வங்கியில் Degree முடித்த நபர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்….

Wed Oct 12 , 2022
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Resolver பணிகளுக்கு என மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் தேவை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 […]
955237 925235 887961 874672 sbi rep 1

You May Like