திருமணமான ஒரே நாளில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தனது மாமியாரின் நடத்தை அன்பாக இல்லை என்று கூறி மணமகள் திருமணத்தை ரத்து செய்து விட்டார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் டெவோரியா மாவட்டத்தில் நவம்பர் 26ஆம் தேதி நடந்துள்ளது.. திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு சடங்கின் போது, குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் இருக்கும் நேரத்தில் மணமகள் இதனை தெரிவித்துள்ளார்..
மணமக்கள் நவம்பர் 25 அன்று மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சிறப்பாக திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து பல்வேறு சடங்குகள் நடந்தன.. ஆனால், நவம்பர் 26 அன்று மணமகள் தனது மாமியார் வீட்டுக்கு வந்த உடனே, ஒரு சடங்கினை பாதியில் நிறுத்தி, “உடனே என் பெற்றோரைக் கூப்பிடுங்கள்” என்று கூறியுள்ளார்.. இதன் பின்னர், நிலைமை மோசமடைந்து, திருமணமே முடிவுக்கு வந்தது.
பல முறை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமாதானப்படுத்த முயன்றும், மணமகள் தனது மாமியார் வீட்டில் மறுத்துவிட்டார். பின்னர், மணமகளின் பெற்றோரும் வந்தனர்; அவர்களும் பேசிப் புரிய வைத்தாலும், மாமியார் வீட்டின் நடத்தை மீது அதிருப்தி கொண்டிருந்ததாக கூறப்படும் மணமகள் தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டார்…
நிலைமை பதற்றமாகியதால், உள்ளூர் பஞ்சாயத்து கூட்டம் அழைக்கப்பட்டது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பினரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். திருமணத்தில் பரிமாறப்பட்ட பொருட்கள் மற்றும் பரிசுகள் அனைத்தும் மீண்டும் பரிமாறப்பட்டு, மணமகள் தனது குடும்பத்தினருடன் திரும்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.. மேலும், பலுவானி காவல் நிலையத்தின் பொறுப்பில் இருந்த பிரதீப் பாண்டே, “இந்த சம்பவம் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது, ஆனால் இது காவல் வழக்காக மாறவில்லை. இரு தரப்பும் பஞ்சாயத்திலேயே பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துவிட்டனர்,” என்று உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து, பலரும் பல்வேறு கோணங்களில் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர், “பல வருடங்கள் ‘அஜஸ்ட்மென்ட்’ செய்து பலரின் வாழ்க்கையை கெடுப்பதற்குப் பதிலாக, இவ்வாறு நேரிலேயே முடிவு செய்தது நல்லதே” என்று எழுதினார்.
மற்றொருவர், “மணமகளுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் பெரிய அளவில் அபராதம் விதித்து தண்டிக்க வேண்டும். மக்கள் திருமணத்தை ஜோக்காகவும் தப்பிக்கும் வழியாகவும் மாற்றிவிட்டார்கள். திருமணம் பற்றி பேச்சுகள் நடக்கும் போது இப்படிப் பட்ட தைரியம் எங்கே போயிற்று?” என்று வாதிட்டார்.
மூன்றாவது பயனர், “என்ன நடந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது… திருமணம் செய்வதையே தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
Read More : ரூ.1 கோடி சம்பாதிக்கணுமா? இதுவே சிறந்த திட்டம்..! அரசு உத்தரவாத்துடன்!



