தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஆடியோமெட்ரிஷியன் (Audiometrist) பதவிக்கான மொத்தம் 11 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர்: ஆடியோமெட்ரிஷியன்
கல்வித்தகுதி:
* விண்ணப்பதார்கள் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களை கொண்டு முடித்திருக்க வேண்டும்.
* ஆடியோமெட்ரி 1 ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* அல்லது கேட்கும் மொழி மற்றும் பேச்சு (DHLS) பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கலாம்.
* அல்லது ஆடியோலாஜி மற்றும் பேச்சு மொழி நோயியல் (BASLP) பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது: 18 வயது
- அதிகபட்ச வயது: 32 வயது
தளர்வுகள்:
- மாற்றுத்திறனாளிகள்: 42 வயது வரை
- முன்னாள் ராணுவத்தினர்: 48 வயது வரை
- கணவரை இழந்த பெண்கள்: 59 வயது வரை
- எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு: உச்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம்: ஆடியோமெட்ரிஷியன் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ், டிப்ளமோ, டிகிரி படிப்பிற்கு 50 சதவீதமும், 12ம் வகுப்பு தகுதிக்கு 30 சதவீதமும், 10-ம் வகுப்பிற்கு 20 சதவீதமும் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள ஆடியோமெட்ரிஷியன் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2025.



