மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவிப்பு எண்: ICMR-NIRBI/Admn/03/Rect/2024-25
1. பணி: Assistant
காலியிடங்கள்: 3 சம்பளம்
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்கவேண்டும்.
2. பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்கவேண்டும்.
3. பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 5 சம்பளம்
சம்பளம்: ரூ.19,900 – 63,200
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 -க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.icmr.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் ரூ.1,600. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.2000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.8.2025