மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்ற விரும்புவோருக்கான முக்கிய வாய்ப்பு! பவர்கிரிட் கார்ப்ரேஷன் (Power Grid Corporation) நிறுவனத்தில் நிதி மற்றும் நிறுவன செயலாளர் (Finance & Company Secretary) பிரிவில் டிரைய்னி அதிகாரிகள் பதவிக்கான 20 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
நிறுவனம்: பவர்கிரிட் கார்ப்ரேஷன்
பதவி: டிரைய்னி அதிகாரி (நிதி / நிறுவன செயலாளர்)
காலிப்பணியிடங்கள்: 20
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000 (பயிற்சி காலத்தில் ரூ.11 லட்சம் ஆண்டுக்கு)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை)
தகுதிகள்:
நிதி பிரிவு: CA / ICWA (CMA) தேர்ச்சி பெற்றவர்கள்
நிறுவன செயலாளர் பிரிவு: இந்திய நிறுவன செயலாளர்கள் நிறுவன இணை உறுப்பினர் பதிவு செய்யப்பட்டவர்கள்
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயது, மத்திய அரசு விதிகள் படி தளர்வு உண்டு
தேர்வு முறை: விண்ணப்பிக்கு நபர்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். தேர்வு மொத்தம் 170 கேள்விகள் கொண்டு அமையும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடித்த கட்டணத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
இறுதியாக எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்வு மையம்: டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, போபால், கவுகாத்தி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: விண்ணப்பம் அக்டோபர் 15 முதல் தொடங்கிய நிலையில், நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி.. கண்ணில் மிளகாய் பொடி தூவி.. பட்டப்பகலில் இளைஞன் வெறிச்செயல்..!!



