தேசிய வீட்டுவசதி வங்கியில் நேரடி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்:
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் – 1
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் – 1
- உதவி ஜென்ரல் மேனேஜர் – 1
- உதவி மேனேஜர் – 1
- உதவி மேனேஜர் – 2
- தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி – 1
- தலைமை கற்றல் மற்றும் மேம்பாடு – 1
- மூத்த வரி அதிகாரி – 4
வயது வரம்பு:
- டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபடியாக 55 வயது வரை இருக்கலாம்.
- உதவி ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு 36 – 55 வயது வரை இருக்கலாம்.
- உதவி மேனேஜர் பதவிக்கு 21 முதல் 30 வரை இருக்கலாம்.
- தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு 40 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
- கற்றல் மற்றும் மேம்பாடு தலைமை பதவிக்கு அதிகபடியாக 62 வரை இருக்கலாம்.
- மூத்த வரி அதிகாரி அப்தவிக்கு 62 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி:
டெபியூட்டி ஜெனரல் மேனேஜர், உதவி ஜெனரல் மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் போன்ற பதவிகளுக்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சிஏ (CA), தொழில் நிர்வாகம், மேனேஜ்மெண்ட் டிப்ளமோ, தொழில் நிர்வாகம் பிஜி டிப்ளமோ அல்லது எம்பிஏ போன்ற கல்வித்தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 15 ஆண்டு வரை தொடர்புடைய பணியிலான அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி: இந்தப் பதவிக்காக கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பொறியியல் பட்டம் அல்லது எம்பிசி (MSc) முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.
கற்றல் மற்றும் மேம்பாடு தலைமை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க சிஏ / செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் / நிறுவன செயலாளர் / எம்பிஏ அல்லது ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக 15 ஆண்டு அனுபவம் தேவை.
மூத்த வரி அதிகாரி: இந்தப் பதவிக்கான தகுதி சிஏ (Chartered Accountant). மேலும், குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பளம்:
டெபியூட்டி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,40,500 முதல் 1,56,500 வரை வழங்கப்படும்.
உதவி ஜெனரல் மேனேஜர் – ரூ. 1,20,940 முதல் 1,35,020 வரை வழங்கப்படும்.
உதவி மேனேஜர் – ரூ. 48,480 முதல் 85,920 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு https://www.nhb.org.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Read more: பெண்களே!. துவைக்காமல் எத்தனை முறை பிரா அணியலாம்?. இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்!.



