இரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா? மாதம் ரூ.44,900 சம்பளம்.. செம சான்ஸ்.. எப்படி விண்ணப்பிப்பது..?

railway 2025

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 434 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.


பணி விவரம்:

மொத்த பணியிடங்கள் – 434

RRB சென்னை ஒதுக்கீடு – 67

பதவிகள் மற்றும் பணியிடங்கள்:

  • செவிலியர் கண்காணிப்பாளர் – மொத்தம் 272 | RRB சென்னை – 43
  • டயாலிசிஸ் டெக்னீஷியன் – மொத்தம் 4 | RRB சென்னை – 1
  • சுகாதார் மற்றும் மலேரியா ஆய்வாளர் (கிரேடு – 2) – மொத்தம் 33 | RRB சென்னை – 7
  • பார்மசிஸ்ட் – மொத்தம் 105 | RRB சென்னை – 12
  • ரேடியோகிராப்பர் (X-Ray) டெக்னீஷியன் – மொத்தம் 4 | RRB சென்னை – 1
  • ECG டெக்னீஷியன் – மொத்தம் 4 | RRB சென்னை – 1
  • ஆய்வக உதவியாளர் (கிரேடு – 2) – மொத்தம் 12 | RRB சென்னை – 2

வயது வரம்பு

  • செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கு 20 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
  • டயாலிசிஸ் டெக்னீஷியன் பதவிக்கு 20 முதல் 33 வரை இருக்கலாம்.
  • சுகாதார் ஆய்வாளர் பதவிக்கு 18 முதல் 33 வரை இருக்கலாம்.
  • பார்மசிஸ்ட் பதவிக்கு 20 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
  • ரேடியோகிராப்பர் பதவிக்கு 19 முதல் 33 வரை இருக்கலாம்.
  • ECG டெக்னீஷியன் பதவிக்கு 18 முதல் 33 வரை இருக்கலாம்.
  • ஆய்வக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 33 வயது வரையும் இருக்கலாம்.
  • வயது வரம்பில் 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவில் 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகள் 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

* செவிலியர் பதவிக்கு 3 வருட பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சி படிப்பு அல்லது நர்சிங் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நர்ஸ் தகுதிக்கான பதிவு செய்திருக்க வேண்டும்.

* டயாலிசிஸ் டெக்னீஷியன் பதவிக்கு இளங்கலை பட்டப்படிப்புடன் Haemodialysis டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு in-house பயிற்சி/ அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* சுகாதார் ஆய்வாளர் பதவிக்கு வேதியியல் பாடமாக கொண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், சுகாதார் ஆய்வாளர் 1 வருட டிப்ளமோ அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

* பார்மசிஸ்ட் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பின்னர் பார்மசி டிப்ளமோ அல்லது பார்மசி இளங்கலை பட்டப்படிப்பு (B.Pharma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* ரேடியோகிராப்பர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்று, ரேடியோகிராப்பி/ X Ray டெக்னீஷியன்/ ரேடியோ நோய் கண்டறிதல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* ECG டெக்னீஷியன் பதவிக்கு ஈசிஜி ஆய்வக தொழில்நுட்பம் / இருதயவியல் / இருதயவியல் தொழில்நுட்ப வல்லுநர் / இருதயவியல் நுட்பங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* ஆய்வக உதவியாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, DMLT/ மெடிக்கல் லேப் ஆகியவற்றில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • செவிலியர் கண்காணிப்பாளர் பதவிக்கு தொடக்கமே ரூ.44,900 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • டயாலிசிஸ் டெக்னீஷியன் பதவிக்கு ரூ.35,400
  • சுகாதார் ஆய்வாளர் கிரேடு – 2 பதவிக்கு ரூ.35,400
  • பார்மசிஸ்ட் பதவிக்கு ரூ.29,200
  • ரேடியோகிராப்பர் பதவிக்கு ரூ.29,200
  • ECG டெக்னீஷியன் பதவிக்கு ரூ.25,500
  • ஆய்வக உதவியாளர் கிரேடு – 2 பதவிக்கு ரூ.21,700 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 9 முதல் தொடங்கிய நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: கள்ளக்காதலனுடன் உல்லாசமா இருந்த மனைவி.. திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த கணவன்..!! ஊரே கூடி வாழ்த்திய சம்பவம்..

English Summary

A notification has been issued to fill vacant posts in the medical department in the Railways.

Next Post

உப்புக்கு பதில் சோடியம் புரோமைடு.. ChatGPT-யிடம் ஆலோசனை கேட்ட நபரின் பரிதாப நிலை..!!

Sun Aug 10 , 2025
Man Nearly Poisons Himself Following ChatGPT's Advice To Remove Salt From Diet
ChatGPT 1

You May Like