பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியிட விவரம்:
MSME உறவு மேலாளர் – 30
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.11.1992 முன்னரும் மற்றும் 01.11.2000 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* மார்க்கெட்டிங் அல்லது நிதி (Finance) பிரிவில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ முடித்தவர்களுக்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்படும்.
* MSME, Credit Management, Banking Relationship போன்ற துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* கல்வித்தகுதி 26.11.2025 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
சம்பளம்: வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு என்பது எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என்பதை பொறுத்து அமையும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://punjabandsind.bank.in/content/recruitment என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.11.2025.



